மீண்டும் எகிறத் தொடங்கிய தங்கம்...! இன்று தங்கம் விலை சற்று உயர்வு...இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன...?
Gold started rising again Gold prices increased slightly today What current gold and silver price situation
இந்த மாதத் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையில் பயணித்த தங்கத்தின் விலை, இன்று திடீர் திருப்பத்தை சந்தித்து மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது.கடந்த ஜூன் 6-ஆம் தேதி தங்கம் கிராமுக்கு ரூ.130 மற்றும் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து நகை வாங்குவோருக்கு நிம்மதி அளித்தது.
அதனைத் தொடர்ந்து பல நாட்களாக விலை இறக்கமே நீடித்தது. குறிப்பாக, நேற்று முன்தினம் தங்கம் கிராமுக்கு ரூ.400 மற்றும் சவரனுக்கு ரூ.3,200 வரை அதிரடியாக சரிந்தது.அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.13,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,400-க்கும் விற்பனையானது.

பின்னர் நேற்று மேலும் ரூ.300 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.குறிப்பாக, ஜூன் 1-ஆம் தேதி முதல் நேற்று வரை கணக்கிட்டால், தங்கம் கிராமுக்கு ரூ.1,000 மற்றும் சவரனுக்கு ரூ.8,000 வரை விலை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் புவிசார் அரசியல் பரபரப்பு காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக உலகளாவிய பணவீக்க அழுத்தம் அதிகரித்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க பல நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்ந்த நிலையில் நீடிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த சூழல் தங்க முதலீட்டின் மீதான ஈர்ப்பை ஓரளவு குறைத்ததால், அதன் விலையிலும் தொடர்ந்து மந்தநிலை ஏற்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியான சரிவுக்கு பிறகு இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,800-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று மாற்றமின்றி இருந்த வெள்ளி விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
Gold started rising again Gold prices increased slightly today What current gold and silver price situation