தங்கம் விலை பறக்குது! குறைய வாய்ப்பு இல்லை என பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன் விளக்கம் - Seithipunal
Seithipunal


தங்கம் விலை இவ்வளவு உயர்வை எட்டும் என்று யாரும் கனவிலும் நினைக்கவில்லை! நாள் தோறும் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கும் தங்கத்தின் பரவசம், முதலீட்டாளர்களையும் பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர் சோம.

மேலும், வள்ளியப்பன் தெரிவித்துள்ளதாவது,"ஒரு பொருளின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் இரண்டு, தேவை மற்றும் வினியோகம். முன்பு தங்கம் வெறும் ஆபரண மதிப்புக்காக இருந்தது; ஆனால் இப்போது அது ஒரு முதலீட்டு சக்தியாகவும், மேலும் உலகளாவிய வர்த்தகத்தின் நாணயமாகவும் மாறியுள்ளது.

இதுவே அதன் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது” என்று தெரிவித்தார்.உலக தங்க கவுன்சிலின் தகவல்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் உலக அரசாங்கங்கள் இணைந்து சுமார் 3,000 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. இந்த அளவிலான மொத்த சேமிப்பு, தங்கத்தின் வினியோகத்தை கடுமையாகக் குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கிகள் வாங்கும் தங்கம் நேராக அவர்களது ‘கஜானாவுக்கு’ போய்விடுவதால், சந்தையில் கிடைக்கும் தங்க அளவு தாறுமாறாகக் குறைந்துள்ளது. இதுவே தற்போதைய விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் என சோம.வள்ளியப்பன் தெரிவிக்கிறார்.மேலும், பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்கள் இப்போது தங்கம், வெள்ளி போன்றவற்றிலும் ETF (Exchange Traded Fund) வடிவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

இதனால் தங்கத்தின் மீது உலகளாவிய முதலீட்டாளர்களின் பார்வை சென்று, விலை மேலும் உயர்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.அவரை கேட்டபோது, “தங்கம் விலை குறையுமா?” என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,“விலை குறைந்தால் சாதாரண மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். இது மீண்டும் தேவை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே தங்கத்துக்கான ஆதரவு முழுமையாக மறையும் வாய்ப்பு மிகக் குறைவு"என்று விளக்கம் கொடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold prices are soaring Economist Soma Valliyappan explains that there no chance decline


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->