இவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.. கூட்டுறவுத்துறை அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றிருக்கும் தகுதிவாய்ந்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். 

இதையடுத்து, தகுதியான நபர்களை கண்டறிவதற்காக நகை கடன் பெற்றவர்களின் பெயர், கடன் பெற்ற கூட்டுறவு வங்கிகளின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர்களின் குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி தொலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு விதிமுறைகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகைக்கு கீழ் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யபடும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது :

நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.  40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் தள்ளுபடி கிடையாது.

அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்திருந்தால் தள்ளுபடி செய்யப்படாது. கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்கள், ஆதார் எண்ணை தவறாக வழங்கியவர்கள், 

குடும்ப அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை வைத்திருப்போருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது. 

இதன்படி,  நகைக்கடன் தள்ளுபடி கோரி விண்ணப்பித்த 48.84 லட்சம் பேரில், 35.37 லட்சம் பேர் தகுதியில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold loan in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->