மத்தியக்குழு சேதங்களை முழுமையாக, சரியாக ஆய்வு செய்ய வேண்டும்.. ஜி கே வாசன் வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் மத்தியக்குழுவினர் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் சேதங்களை முழுமையாக, சரியாக ஆய்வு செய்ய வேண்டும் என ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெய்த பருவமழை, கனமழை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசின் நிவாரணம் கிடைக்கும் வகையில் முறையாக மத்திய குழுவினரின் ஆய்வுப் பணிகள் அமைவதை மத்திய அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பெய்த மழையால் மாநிலத்தில் சென்னை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட விவசாயப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இலட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரினால் மூழ்கடிக்கப்பட்டு அழிந்துவிட்டதாக விவசாயிகள் மனவேதனையோடு தெரிவிக்கின்றனர். 

மழை, வெள்ளத்தால் தாழ்வான பகுதி வாழ் மக்களும், சாதாரண ஏழை, எளிய மக்களும் வருமானம் இன்றி, வாழ்வாதாரத்தை இழந்து நின்றார்கள்.
கனமழையால் விளைநிலங்கள், சாலைகள், மின்சார இணைப்பு, குடிநீர் வழங்கல், கழிவுநீர் பாதை ஆகியவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழுவினரின் ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவர்கள் மேற்கொள்ளும் ஆய்வின் மூலம் தயாரிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நிவாரணம் கிடைக்கும்.

அப்படி இருக்கும்போது பாதிக்கப்பட்டுள்ள, சேதமடைந்துள்ள அனைத்தையும் மத்தியக் குழுவினர் முழுமையாக, சரியாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின் போது பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள விவசாயிகள், பொது மக்கள் ஆகியோரிடமும் பாதிப்புகள் குறித்து கேட்க வேண்டும். 
அதன் அடிப்படையில் மழை வெள்ள பாதிப்பின் கணக்கெடுப்பு அமைய வேண்டும். இந்த கணக்கெடுப்பு மற்றும் தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்படும் பாதிப்பின் கணக்கீடு ஆகியவற்றை கொண்டு தமிழக மழை வெள்ள பாதிப்பு குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளிக்க வேண்டும்.

இப்படி கொடுக்கப்படும் அறிக்கையானது தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் அமைய வேண்டும் என்பது தான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த முழு அறிக்கை ஒன்றை மத்தியக் குழுவினரிடம் அளிக்க வேண்டும்.
மத்தியக் குழுவினரும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு ஏற்ப ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும், அதன் மூலம் மத்திய அரசும் தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கவும் வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gk vasan statement on nov 21


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->