நம்பிக்கை துரோகத்திற்கு இதுதான் தண்டனை... கோவையை பட்டப்பகலில் பதறவைத்த நபர்..!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவரின் பெயர் துரைராஜ். இவரது மனைவியின் அக்கா மகள் மாது என்கிற இளம்பெண்ணும் இவர்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னதாக மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொண்ட நிலையில்., மாமியார் கொடுமையின் காரணமாக கணவரை பிரிந்து வந்துள்ளார். 

கணவரை பிரிந்து மீண்டும் துரைராஜின் இல்லத்திற்கு வந்துவிட்ட நிலையில்., கடந்த ஐந்து மாதத்திற்கு முன்னதாக வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இந்த நேரத்தில் வீட்டில் இருந்து ஐந்து சவரன் நகைகளும் மாயமாகியுள்ளது. இவரை பல இடஙக்ளில் தேடியும் காணாததால்., இராசபாளையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., மாதுவிற்கு பல ஆண்களுடன் நெருக்கமான பழக்கமானது இருப்பது தெரியவந்துள்ளது.  இந்த விஷயத்தை அறிந்த துரைராஜ் மாதுவின் மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இதற்கு பின்னர் மாது கோயம்புத்தூரில் உள்ள துடியலூர் வி.எஸ்.கே நகரில் தங்கியிருந்துள்ளார். 

ராஜபாளையம், இராசபாளையம், rajapalayam, rajapalayam railway station, coimbatore railway station, kovai,

இது தொடர்பான தகவலறிந்த துரைராஜ் கடந்த புதன்கிழமை இரவன்று இராஜபாளையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்டு சென்று அங்குள்ள வி.எஸ்.கே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். பின்னர் மறுநாள் காலையில் பேருந்து நிறுத்தத்திற்கு மாது வரவே., மாதுவை கண்ட துரைராஜ் கத்தியால் மாதுவை சரமாரியாக வெட்டியுள்ளார். 

பின்னர் சம்பவ இடத்தில் இருந்து துரைராஜ் தப்பியோடவே., இவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் நையப்புடைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் துரைராஜை பொதுமக்களிடம் இருந்து மீட்டு.,மாதுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும்., காவல்துறையினர் அழைத்து செல்லும் போது துரைராஜ் தனது மனைவிக்கு தொடர்பு கொண்டு., துரோகம் செய்தால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை.. நம்பிக்கை துரோகம் செய்தால் இதுவே கதி என்று கூறி அங்கிருந்த மக்களை பெரும் பரபரப்பிற்கு உள்ளாக்கி சென்றார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girl try to murder attempt by relation police arrest culprit


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->