ஆசை ஆசையாய் நுங்கு பறிக்கச் சென்ற மாணவர்கள்... எமனாக மாறிய மின்சாரம்...! - ஸ்ரீபெரும்புதூரில் பெரும் சோகம்...!
Students who went to snatch power desire Electricity become what it is Great tragedy Sriperumbudur
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள சிறுமாங்காடு கிராமத்தில் பரிதாபகரமான விபத்து ஒன்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பனைமரத்தில் நுங்கு பறிக்கும் போது, மின்மாற்றி அருகே சிக்கியிருந்த நுங்கை இரும்புக் கம்பியின் உதவியுடன் எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இருவர் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த டில்லி கணேஷ் (17) மற்றும் தட்சிணாமூர்த்தி (17) ஆகிய இளைஞர்கள் இந்த விபத்தில் பலியாகினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Students who went to snatch power desire Electricity become what it is Great tragedy Sriperumbudur