ராட்சத ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் தலை.. கம்பி நீட்டிய ஆப்ரேட்டர்..! சென்னையில் பரபரப்பு..!   - Seithipunal
Seithipunal


சென்னையில், மிக பெரிய ராட்டினத்தில் சிறுமி ஒருவரது, தலை சிக்கி கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியின் தலை சிக்கியது கண்டு காப்பாற்ற முன்வராமல், தப்பித்து ஓடிய ஆப்ரேட்டரை போலீசார் தேடி வருகிறார்.

சென்னையில் இருக்கும் பெசன்ட் நகர் பீச் அருகே தனியார் விளையாட்டு பூங்கா ஒன்று வெகுகாலமாக இயங்கி வருகிறது. இந்த விளையாட்டு பூங்காவில் கேரளாவை சேர்ந்த சல்மா என்னும் சிறுமி ஒருவர் ராட்டினத்தில் விளையாடுவதற்காக எறியுள்ளார். 

அந்த சமயத்தில், எதிர்பாராத விதத்தில் அந்த சிறுமியின் தலை ராட்டினத்தில் வசமாக சிக்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் பயத்தில் அந்த ஆப்பரேட்டர் சிறுமியை காப்பாற்றாமல் அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கிறான்.

இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வெகு நேர போராட்டத்திற்கு பிறகு ராட்டினத்தில் சிக்கிய சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girl stuck in raatinam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->