மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வரத்துக் குறைவால் இஞ்சி விலை கடும் உயர்வு.! - Seithipunal
Seithipunal


மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வரத்துக் குறைவால் இஞ்சி விலை கடும் உயர்வு.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் செயல்பட்டு வரும் மொத்த காய்கறி மண்டிக்கு நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட  மாவட்டங்களில் விளைவிக்கப்படும் தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், நூல்கோல், டர்னீப், முள்ளங்கி, முட்டைகோஸ், சேனைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது. 

அதன் பின்னர் ஏல முறையில் வியாபாரிகள் காய்கறிகளை விலைக்கு வாங்கி விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர். அந்தவகையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மருத்துவ குணம் கொண்ட இஞ்சி  விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. 

அவ்வாறு வரும் இஞ்சி தரம் பிரிக்கப்பட்டு, தரத்திற்கு ஏற்ப 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கும், குறைந்த பட்சமாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் இஞ்சி வரத்து குறைவாக இருப்பதால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. 

இந்த விலை உயர்வுக் குறித்து வியாபாரிகள் தெரிவித்ததாவது:- "கடந்த வாரத்தில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.8,750க்கு விற்பனையானது. 

தற்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளதனால் 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இஞ்சி அதிகபட்சமாக ரூ.9,700க்கு விற்பனையானது. அதேபோன்று தரம் குறைந்த இஞ்சி குறைந்தபட்ச அளவாக ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது என்று அவர் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ginger prices increase in mettupalaiyam market


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->