மாநிலம் அதிர தயாராகுங்கள்..தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் அழைப்பு! - Seithipunal
Seithipunal


முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில. நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு.முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டு வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடையும் அமைக்கப்படுகிறது. மாநாடு மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. 


இந்தநிலையில்  தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்...  எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும்  மக்கள் சக்தியோட. கடந்து வந்துகிட்டே இருக்கோம்...வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்..இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது .

முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில. நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்துநம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு... அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி...மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.மாற்று சக்தி நாமன்று.முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Get ready for the state to shakeThondars the leader Vijay calls you


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->