ஜெர்மனி ஒப்பந்தம்: முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த நயினார் – பதிலடி கொடுத்த அமைச்சர் TRB ராஜா! - Seithipunal
Seithipunal


ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டு ஒப்பந்தங்களைச் சுற்றி தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களுடன் ரூ.3,200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக வெளிவந்த செய்தி, மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் கடும் விமர்சனத்திற்கு காரணமாகியது.

“தமிழகத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக இயங்கிவரும் நிறுவனங்களுடனே வெளிநாட்டில் சென்று ஒப்பந்தம் போடுவதன் அவசியம் என்ன? ஒரே நாளில் முதலமைச்சர் அறையிலேயே முடிக்கக்கூடிய விஷயத்திற்காக பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பதிவில், பா.ஜ.க. தலைமையை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அவர் கூறியதாவது:“தமிழ்நாடு முதலமைச்சர் ஜெர்மனியில் முதல் நாளிலேயே ரூ.3,201 கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளார். அதில் ஒன்றான Knorr-Bremse நிறுவனம் 120 ஆண்டுகள் பழமையான ஜெர்மானிய நிறுவனம். இவர்களுக்கு தமிழ்நாட்டில் இதுவரை தொழிற்சாலை இல்லை. திராவிட மாடல் அரசின் முயற்சியால் சமீபத்தில் சென்னையில் செயற்கை நுண்ணறிவு அலுவலகம் தொடங்கப்பட்டது. தற்போது, ரூ.2,000 கோடி முதலீட்டில் ரெயில் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.”

மேலும், மகாராஷ்டிரா முதலமைச்சர் டாவோசில் அமர்ந்து, இந்தியாவின் Reliance போன்ற நிறுவனங்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் MoU கையெழுத்திட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டியும், “அத்தகைய சில்லறை வேலைகளை தமிழ்நாடு ஒருபோதும் செய்யாது” எனக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ்நாடு தற்போது இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளையும் வேலைவாய்ப்புகளையும் வழங்கும் மாநிலமாக இருப்பதை, மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துவதாகவும் அமைச்சர் ராஜா வலியுறுத்தினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Germany Agreement Nayinar criticized Chief Minister Stalin Minister TRB Raja retaliated


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->