கரையில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பொட்டலங்கள்! சுங்கத்துறையினர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
Ganja packets washed customs seized
நாகப்பட்டினம், வேதாரணியம் அருகே உள்ள கோடியக்கரை மீனவர் கிராமத்தில் பல்வேறு குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அங்கு உள்ளவர்களுக்கு பிரதான தொழிலாக மீன் பிடி தொழில் உள்ளது. கடலுக்குச் சென்று இவர்கள் மீன்பிடித்து வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது சுமார் 4.5 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரைக்கு கிழக்குப் பகுதியில் கரையோரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கி கிடந்தன.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக இது குறித்து சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சுங்கத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 40 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.
பின்னர் அவற்றை சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கோடியக்கரையில் இருந்து கஞ்சா கடத்தும் போது தவறி கடலில் விழுந்திருக்கலாம்.
கஞ்சா போட்டலங்களில் பாசி பிடித்துள்ளத்தை பார்த்து கடலில் விழுந்து சுமார் 1 மாதம் இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Ganja packets washed customs seized