கங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா..ஆளுநர் கைலாஷ் நாதன் பங்கேற்பு! - Seithipunal
Seithipunal


பிள்ளைச்சாவடி ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன்,அர்ஜீன குமாரி அறக்கட்டளை நிறுவனர் செந்தில் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் நோக்கி அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ கெங்கையம்மன் ஆலய திருப்பணி நடந்து வந்த நிலையில், கடந்த மே மாதம் அர்ஜீனகுமாரி அறக்கட்டளை நிறுவனர் செந்தில் கருவறையின் முழு செலவையும் ஏற்று ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.இதனை தொடர்ந்து ஆலய திருப்பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இன்று  10.00 மணியளவில் குடமுழுக்கு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் துணைநிலை ஆளுநர்  கைலாஷ்நாதன் மற்றும் அர்ஜீனகுமாரி அறக்கட்டளை நிறுவனர் செந்தில் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடமுழுக்கு பெருவிழாவை மிகச் சிறப்பாகவும் கோலாகலமாக நடத்தி வைத்தனர்.

குடமுழுக்கு பெருவிழாவில் கலந்து கொண்ட அர்ஜுனகுமாரி அறக்கட்டளை நிறுவனர் செந்திலுக்கு கோவில் நிர்வாகிகள்  பூரண கும்ப மரியாதை அளித்து கௌரவபடுத்தினர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ganga Amman Temple Maha Kumbhabhishega festival Governor Kailashnathans participation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->