TVK மாநாட்டு திடலில் குவிந்த குப்பைகள்..!! உணவுகளை வீசிச் சென்றதால் துர்நாற்றம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டிற்கு சுமார் 15,000 வாகனங்கள் வந்ததாகவும், சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்று இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த மாநாடு முடிந்தவுடன் வி.சாலை முதல் விழுப்புரம் வரையிலான 17 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலானது. வி.சாலையில் இருந்து விழுப்புரத்துக்கு நடந்து வந்தவர்கள் 3 மணி நேரத்தில் வந்துவிட்டாலும், பைக்கில் வந்தவர்கள் வருவதற்கு 5 மணி நேரமானது. இதனால் இப்பகுதியில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால் இணையதள சேவையும் முடங்கியது.

மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான காலி வாட்டர் பாட்டில்கள், உணவு தட்டுகள், குப்பைகள் என்று சுமார் மூன்று டன் அளவுக்கான குப்பைகள் இருந்தது. மீதமான உணவுகளை வீசியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gabage at tvk conference in vilupuram


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->