பண மோசடி, கொலை மிரட்டல் வழக்கு! திருச்சியில் சிக்கிய பாஜக, விசிக நிர்வாகிகள்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ராஜ்குமாரிடம், பணத்தை இரட்டிப்பாக தருவதாகக் கூறி 45 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு - பின்னர் பணத்தை திருப்பி கேட்ட போது ராஜ்குமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக, அவர்  அளித்த புகாரின் அடிப்படையில், எல்பின் நிறுவனம் மற்றும் அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி பிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ராஜா அண்மையில் தான் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

இது குறித்து ராஜ்குமார் தெரிவிக்கையில், "வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த போது இரண்டு கால்களும் அடிபட்டுவிட, அதற்கு காப்பீட்டு பணம் 50 லட்ச ரூபாய் கிடைத்தது, உடல்நிலை சரியில்லாததால் சொந்த  ஊருக்கே வந்த நான்,  எல்பின் நிதி நிறுவனம் ஒரே வருடத்தில் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாக என்னுடைய நண்பர்கள் சொன்னதை நம்பி, அந்நிறுவனத்தில் ரூ.45 லட்சம் முதலீடு செய்தேன். 10 மாதங்களில் அதை இரட்டிப்பாக்கி ரூ.90 லட்சம் தருவதாகக் கூறினர். அதன் பிறகு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார்கள். பின்னர் இவர்களைப் பற்றி விசாரித்தபோது மக்களை ஏமாற்றுவதாக இந்நிறுவனத்தின் மீது நான்கைந்து வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. அதனால் நான் பணத்தினை திருப்பி கேட்க, அவர்கள் தர மறுத்ததால் கடந்த ஜூன் 15-ம் தேதி புதுக்கோட்டை காவல்துறையில் புகார் செய்தேன் என கூறியுள்ளார். 

பாதிக்கப்பட்ட ராஜ்குமார் 

எல்.பின் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ரமேஷ், ராஜ்குமார் சொல்வது பொய், அவர் கொடுத்தது  30 லட்ச ரூபாய்தான் எனவும், 45 லட்சம் பணம் கட்டியதாகப் பொய் சொல்கிறார் என கூறியுள்ளார். மேலும் அவருக்கு 10 மாதம் முடிந்த பிறகே பணம் தர வேண்டும், அதற்குள் அவர் பணம் கேட்கிறார். அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும் என கூறியுள்ளார். 

இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் கட்சியினர் என்பதால், விசாரணை எப்படி நடக்கும், சம்மந்தபட்ட கட்சி தலைமை என்ன முடிவெடுக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fund cheating Case against BJP and VCK Administrators in Trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->