ஊரகப்பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு.!!
fund allocated to construction bridges in rural areas
சட்டசபையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கான நிதிகளை மாநில அரசு ஒதுக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஊரகப்பகுதிகளில் உயர்மட்ட பழங்கள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, ஊரகப்பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் கட்ட சுமார் ரூ. 505 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு வந்த கோரிக்கையை பரிசீலித்து முன்னுரிமை அடிப்படையில் 100 பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக வெள்ள பாதிப்பைத் தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.338 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
fund allocated to construction bridges in rural areas