வெள்ள பாதிப்பை தடுக்க 4 மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு.!!
fund allocated to 4 district for prevent flood damage
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த மழை காலத்தில் சென்னையில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. இதனையொட்டி மாநில அரசு ஓரளவுக்கு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டாலும் மேக வெடிப்பு மூலம் சில மணி நேரங்களிலேயே அதிக மழை கொட்டி தீர்த்து விடுகிறது. அதனால், கால்வாய்களில் மழைநீர் தேங்கி சாலைகளில் குளம்போல் நிற்கிறது.
இந்த நிலையில் தமிழக அரசு நீர்வளத்துறை மூலம் தற்போதே முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்கி உள்ளது. அதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.338 கோடி ஒதுக்கியுள்ளது.
அவற்றில் முதல்கட்டமாக ரூ.9 கோடியே 40 லட்சம் செலவில் சென்னை ஆலந்தூரில் உள்ள மணப்பாக்கம் கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. மேலும் சில பணிகளையும் தொடங்கி அவற்றை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
English Summary
fund allocated to 4 district for prevent flood damage