இரண்டாவது வாரமாக முழு ஊரடங்கு.. வெறிச்சோடிய சாலைகள்..! - Seithipunal
Seithipunal


இரண்டாவது வாரமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுபடுத்தும் விதமாக இரவு  நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி, இரண்டாவது வாரமாக இன்று தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இன்று, பால், பத்திரிகை வினியோகம், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவம், மருந்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவங்களில் பார்சல் சர்வீஸ்க்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறைச்சி கடைகள், ஜவுளி-நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது. டாஸ்மாக் மதுபான கடைக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். சுமார் 60ஆயிரம் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுப்படுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Full curfew for the second week


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->