இனி ரெயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுத்தால் ₹1,000 அபராதம்!
From now on if you take reels at railway stations there will be a fine of ₹1,000
ரெயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனையும் மீறி ரீல்ஸ் எடுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்க ரெயில்வே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்களில் செல்போனில் 'ரீல்ஸ்' எடுப்பது தற்போது பெரிதும் அதிகரித்துள்ளது. இது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், பாதுகாப்புக்கும் ஆபத்தாக மாறியுள்ளது.
இதனை கட்டுப்படுத்த, ரெயில்வே துறை களத்தில் இறங்கியுள்ளது. இனிமேல் ரெயில் நிலையங்களில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்போர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.புகைப்படம் எடுக்க மட்டுமே அனுமதி உள்ளதாகவும், வீடியோ எடுப்பது சட்டவிரோதம் எனவும் ரெயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
CCTV கண்காணிப்பில் ரீல்ஸ் எடுப்போர் விரைவில் பிடிபடுவர் என எச்சரிக்கையுடன், பாதுகாப்பு படையினருக்கு புதிய உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள்.

மேலும், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்பதை தடுக்க தண்டவாளப் பகுதிகளை அடிக்கடி ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
From now on if you take reels at railway stations there will be a fine of ₹1,000