"போலிஸ் உங்கள் நண்பன்" ராக்கிக் கட்டி கோவை போலிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்.!  - Seithipunal
Seithipunal


இன்று உலகம் முழுதும் நண்பர்களால் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நண்பர்கள் தினம் வட இந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அங்கே நண்பர்களுக்கு ராக்கி கயிறு கட்டி இந்த நண்பர் தினத்தை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் வேலை பார்த்து வரும் ஜேம்ஸ் என்ற போலீஸ் வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தனது நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகளும் அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். அந்த போலீஸின் செயல் தற்போது பலரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

வாகன ஓட்டிகளிடம் ஏதாவது காரணங்களை கூறி பொய் வழக்குகளை போடுவதாக கணக்கு காட்டி பணம் பறிக்கும் போலீஸ் கும்பலுக்கு மத்தியில் காவல்துறை உங்கள் நண்பன் என்பதை உணர்த்தும் வகையில் பாசமழை பொழிந்த ஜேம்ஸை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Friendship day special kovai police Rocky


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->