செங்கல்பட்டில் அதிர்ச்சி; கடனை திருப்பிக்கேட்ட நபரை கார் ஏற்றி கொன்ற நண்பன்..! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சரத்பாபு என்பவர்எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அவரது நண்பரான சிவராஜ் அதே பகுதியைச் சேர்ந்தவர். இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தற்காலிக அமரர் ஊர்தி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரத்பாபுவிடம் இருந்து ரூ.5 லட்சம் ரூபாய் கடனாக சிவராஜ் பெற்றுள்ளார். இந்நிலையில் கொடுத்த கடனை சிவராஜிடம் சரத்பாபு திருப்பி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதற்கிடையில், சரத்பாபு அவரது வீட்டின் அருகே சாலையோரமாக நின்று அவரது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அந்த வழியாக காரில் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிவராஜ், சரத்பாபுவை கொலை செய்யும் நோக்கத்தில், காரை அதிவேகமாக இயக்கி அவர் மீது மோதியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சரத்பாபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த படாளம் போலீசார் சிவராஜை கைது செய்து, காரை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Friend kills man asked for loan repayment by running over him with car


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->