சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் இலவச வைஃபை சேவை விரைவில் அறிமுகம்.. மாநகராட்சி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச வைஃபை சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னையின் அடையாளமான மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு  ஆயிரக்கணக்கான உள்ளூர் பொதுமக்களும், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் இடமாக உள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெரினா கடற்கரையை ஏராளமான வசதிகளுடன்  மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச வைஃபை சேவை வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் வைஃபை சேவை வழங்கும் நிறுவன அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இலவச வைபை சேவை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் 24 மணி நேரமும் இலவசமாக இணைய சேவையை வழங்குவதாக வைஃபை சேவை வழங்கும் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்காக மாநகராட்சி நிர்வாகம் எந்த கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தேவையான உபகரணங்கள் உபகரணங்களை நிறுவும் இடம், மின்சார வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளை மாநகராட்சி வழங்க வேண்டும் என்றும் இலவச வைஃபை சேவை வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர்களுடன் ஆலோசித்து பிறகு பதில் அளிப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் இலவச வைஃபை வழங்கும் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து எந்தெந்த இடங்களில் உபகரணங்களை அமைப்பது என்பது குறித்து இறுதி செய்யப்பட்டு மாநகராட்சி மற்றும் இலவச வைஃபை சேவை வழங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free WiFi in Chennai Marina and Besant nagar beach


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->