இமாகுலேட் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி..MLA அனிபால் கென்னடி வழங்கினார்!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி இமாகுலேட் பள்ளியில் 2024-25 கல்வியாண்டில் படித்த 347 மாணவிகளுக்கு அனிபால் கென்னடி எம்எல்ஏ மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

புதுச்சேரி மாநிலத்தில் மேல்நிலை பள்ளி பயிலும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதுச்சேரி அரசு  வருடம் தோறும் இலவச மிதி வண்டிகளை வழங்கி வருகிறது, அந்த வகையில் இந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி: உப்பளம் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் இமாகுலேட் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், சமூக நலத்துறை வாயிலாக மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், உப்பளம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி அவர்கள் கலந்து கொண்டு, 2024-25 கல்வியாண்டில் படித்த 347 மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் பள்ளி முதல்வர் அருட்திரு. ஜான் ஹில்டா, மதர் ஜெசிந்தா மேரி, சிஸ்டர் ஜான்சி மற்றும் திரு. சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தினர்.தொடர்ந்து விழாவில் பேசிய சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் மாணவிகளை ஊக்காவித்து வாழ்த்தி பாராட்டினார்.
விழாவின் வெற்றிக்கு பள்ளி ஆசிரியர்கள் முழுமையாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free bicycles for students of Imaculate School.MLA Anibal Kennedy provided


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->