காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை - சிறுமியின் தந்தை உள்பட 4 பேர் கைது.!!
four peoples arrested for thiruchenthur youth murder issue
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி நகர் குடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் என்பவர் தனது காதலியுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து தனது மகளை காணவில்லை என சிறுமியின் தந்தை கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்தப் புகாரின் படி போலீசார் அவரது மகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் மணிகண்டன் நேற்று வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூரை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று பேர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மணிகண்டன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றினர்.
மேலும், இந்தக் கொலை தொடர்பாக சிறுமியின் தந்தை உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டி படுகொலை செய்ததாக சிறுமியின் தந்தை, தம்பி உட்பட 4 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
four peoples arrested for thiruchenthur youth murder issue