கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 4 பேர் கைது - போலீசார் அதிரடி.!!
four peoples arrested for fake liquor sales in namakkal
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, பேளுக்குறிச்சி, திருச்செங்கோடு மற்றும் நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மதுவிலக்கு சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் நல்லூர் அருகில் உள்ள குன்னமலை கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, சாமிநாதன் ஆகியோரிடமிருந்து 17 லிட்டர் சாராயம் மற்றும் 30 லிட்டர் சாராய ஊரல் கைப்பற்றப்பட்டது.

இதேபோல், திடுமல் தாசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவரிடமிருந்து 25 லிட்டர் சாராய ஊரல், கல்லாங்காட்டுபுதூர் கொண்டரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரிடமிருந்து 4 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் சாராய ஊரல் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தங்கள் ஊரில் நடைபெறும் கோயில் திருவிழாவை முன்னிட்டு கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
English Summary
four peoples arrested for fake liquor sales in namakkal