முன்னாள் பாரத பிரதமர், திரு.மன்மோகன் சிங் அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


இந்திய பொருளாதார சிற்பி' முன்னாள் பாரத பிரதமர், திரு.மன்மோகன் சிங் அவர்கள் பிறந்ததினம்!.

 இந்தியாவின் முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி தற்போது பாகிஸ்தானிலுள்ள கா (புயா) என்னும் ஊரில் பிறந்தார்.

 மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என்று பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

 டாக்டர் மன்மோகன் சிங் பொது வாழ்க்கையில் பல்வேறு விருதுகளையும், பெருமைகளையும் பெற்றுள்ளார். இதில் முக்கியமானது இந்தியக் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண், இந்திய அறிவியல் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு நூற்றாண்டு பிறந்த நாள் விருது (1995), சிறந்த நிதியமைச்சராக இருந்ததற்காகக் கிடைத்த ஆசியச் செலாவணி விருது, சிறந்த நிதியமைச்சருக்கான யூரோ செலாவணி விருது (1993), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு (1956) ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.

 தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் டாக்டர் சிங், நாடாளுமன்றத்தின் மேலவையில் (மாநிலங்களவை) உறுப்பினராக 1991ல் இருந்து இருக்கிறார். இவர் 1998 முதல் 2004 வரையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 

 2004ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், மே மாதம் 22ம் தேதி டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார். அதன்பின்னர் 22 மே 2009ல் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

 உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மன்மோகன் சிங் தனது 92-ஆவது வயதில் 2024 டிசம்பர் 26 ஆம் தேதி அன்று மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Prime Minister of India Mr Manmohan Singhs birthday


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->