முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் திரு.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் நினைவு தினம்!.
Former President Dr APJ Abdul Kalams memorial day
இந்திய ஏவுகணை நாயகன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் திரு.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் நினைவு தினம்!.
இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர் 1980ஆம் ஆண்டு SLV-III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகிணி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.
இவர் பத்மபூஷண்(1981), பத்மவிபூஷண்(1990), பாரத ரத்னா (1997) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகிய புத்தகங்கள் புகழ் பெற்றவைகள்.
1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். 2002ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக ஜூலை 25, 2002ல் பதவியேற்றார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் 2015ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மறைந்தார்.

தமிழுக்கு தொண்டாற்றிய 'கவிமணி' திரு.தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பிறந்ததினம்!.
தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார்.
இவர் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1940ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை 'கவிமணி' என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார்.
மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
இணையற்ற தமிழ் கவிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 78-வது வயதில் 1954 செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Former President Dr APJ Abdul Kalams memorial day