முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் நினைவு தினம்..அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை!
Former Chief Minister RV Janakiramans remembrance day Political leaders pay tribute by offering flowers!
புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் நினைவு தினத்தை முன்னிட்டு மாநில கழக அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி திமுக முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. ஜானகிராமனின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் திமுகவினர் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.அதன் ஒருபகுதியாக அரசு சார்பில் இன்று ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு சபாநாயகர் செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமனின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில்திமுக மாநில கழக அமைப்பாளர் இரா.சிவா அவர்கள் தலைமையில், கழகத்தினர் கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆர்.வி.ஜானகிராமன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் எஸ்.பிசிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ, இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ மற்றும் மாநில கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழக நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள், அணிகளின் நிவாகிகள் கலந்துகொண்டனர்.
English Summary
Former Chief Minister RV Janakiramans remembrance day Political leaders pay tribute by offering flowers!