கோவையில் அதிரடி சோதனை.! சிக்கிய 350 கிலோ... ஆடிப்போன மக்கள்.!!
food safety department rain for kovai
கோயம்பத்தூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பல கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர், அப்போது அழுகிய மற்றும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட கிலோ பழங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கோயம்பத்தூர் மாநகரில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகா தலைமையிலான குழுவினர் கோயம்பத்தூர் கருப்ப கவுண்டர் வீதி, பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது பல்வேறு கடைகளில் அழுகிய மாம்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களும் விற்பணைக்காக வைக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 350 கிலோ எடையிலான பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை வேதி பொருட்கள் மூலம் அழித்தனர். மேலும் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கடைக்காரர்களை எச்சரித்தனர்.
English Summary
food safety department rain for kovai