கோவையில் துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு? அதிமுக–பாஜக கடும் கண்டனம்!
Food for sanitation workers in garbage trucks in Coimbatore AIADMK BJP strongly condemn
கோவை செம்மொழி பூங்கா பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு, மாநகராட்சியின் குப்பை மற்றும் ஹோட்டல் கழிவுகளை அள்ளும் வாகனத்தில் உணவு விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அரசியல் சூடுபிடிக்க வைத்துள்ளது. அமைச்சர் கே.நேரு பார்வையிட்ட தினமே நடந்த இந்த நிகழ்வு இணையத்தில் புகைப்படங்களாக பரவியதும், பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது எக்ஸ் தள பதிவில், இது தூய்மைப் பணியாளர்களின் மரியாதையை இழிவுபடுத்தும் செயல் என கடும் கண்டனம் தெரிவித்தார். “குப்பை வண்டியில் உணவு அனுப்புவது, இந்த அரசின் ‘மரியாதை’ எப்படி செயல்படுகிறது என்பதை காட்டும் இழிவான செயல்” என்றும், “தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய மரியாதையுடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் இதே சம்பவத்தை “அருவருக்கத்தக்க ஆணவம்” என்று கண்டித்தார். தூய்மைப் பணியாளர்களைப் போல சமூகத்தின் அடித்தட்டு மக்களை இவ்வாறு நடத்துவது திமுக அரசின் முகம்தான் என அவர் குற்றம்சாட்டினார்.
சம்பவம் பெரும் எதிர்ப்பை உருவாக்கிய நிலையில், சமூக வலைதளங்களிலும் இந்த நிகழ்வு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
English Summary
Food for sanitation workers in garbage trucks in Coimbatore AIADMK BJP strongly condemn