சென்னையில் கண்காணிப்பு தீவிரம் -மாநகராட்சி அதிரடி.! - Seithipunal
Seithipunal


சென்னை முழுவதும் 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை குழுக்கள் மூலமாக இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய 25 விதி மீறல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சுவரொட்டிகள் ஒட்டியதுதொடர்பாக 12 புகார்களும், வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடத்திற்கு 200 மீட்டர் தூரத்திற்குள் தேர்தல் அலுவலகம் அமைப்பது தொடர்பாக நான்கு புகார்களும், 20 நபர்களுக்கு மேல் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக மூன்று புகார்களும், விளம்பர பலகைகள், கொடி தோரணங்கள், பேரணி, அனுமதியின்றி பிரசாரம், விதிமுறைக்கு புறம்பாக கூட்டம், பொது மக்களுக்கு புடவை வழங்கியது போன்ற விதிமுறைகள் தொடர்பாக தலா ஒரு புகார் என ஆறு புகார்கள் என மொத்தம் 25 புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flying Squad Inspection


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->