தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 8 விமானங்கள் - நடந்தது என்ன?
flight service affected by rain in chennai airport
வங்கக் கடலில் 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்தத் தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, அபுதாபி, துபாய், கொழும்பு, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த எட்டு விமானங்கள், மழை மற்றும் காற்றால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த படி இருந்தன.
உடனே, அந்த விமானங்கள் அனைத்தும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன. இந்த விமானங்கள் அனைத்தும் சென்னையில் வானிலை சீரான பிறகு மீண்டும் சென்னைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, சென்னையில் இருந்து துபாய், கொச்சி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லக்கூடிய 10 விமானங்கள் மற்றும் அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய பத்து விமானங்கள் என்று மொத்தம் 20 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
English Summary
flight service affected by rain in chennai airport