ஆந்திராவிலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்திய நபர் - 5 ஆண்டு சிறை தண்டனை..! - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக மதுரை மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, போலீசார் காஞ்சீபுரத்தை அடுத்த பட்டறைபெருமத்தூர் சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது சந்தேகப்படும் விதமாக அங்கு ஒருவர் நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்  மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி தாலுகா நல்லச்சான்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தப்போது அவரிடம் நான்கு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

அதன் பின்னர் போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருமகள் முன்னிலையில் நடைபெற்றது. 

அப்போது, போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, லட்சுமணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five years jail penalty to young man for drugs kidnape in andhira


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->