போலீசாரை ஓட ஓட விரட்டிய போதை ஆசாமிகள்.! பூந்தமல்லியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


போலீசாரை ஓட ஓட விரட்டிய போதை ஆசாமிகள்.! பூந்தமல்லியில் பரபரப்பு.!

சென்னை பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவுக்கு வந்த திருமாவளவன் என்பவரிடம் கஞ்சா போதையில் இருந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால், அவரைக் கத்தியால் தாக்கிவிட்டு, பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பான புகாரின் படி பூந்தமல்லி காவலர் சரவணன் என்பவர் விசாரிக்க சென்றார். அப்போது கஞ்சா போதையில் இருந்த மூன்று பேரும் காவலர் சரவணனை கையில் கத்தியுடன் ஓடஓட விரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

இதையறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, கஞ்சா போதையில் காவலரை விரட்டிய சபரி, சூர்யா, சந்தோஷ் மற்றும் மேலும் இரண்டு சிறுவர்கள் என்று மொத்தம் 5 பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில், அவர்கள் இதேபோன்று மக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து வந்ததும், கோயில் திருவிழாவில் பலரிடம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன், பைக், ஆயுதங்கள் என்று அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து மூன்று பேரும் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்கள் இருவரும் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். கஞ்சா ஆசாமிகள் கத்தியைக் காட்டி போலீசாரை ஓடஓட விரட்டிய சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five peoples arrested for chased police in poonthamalli


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->