ஈரோடு இடைத்தேர்தல் : நாளை வாக்கு எண்ணும் பணிக்காக ஐந்து அடுக்கு பாதுகாப்பு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவை ஒட்டி அந்த தொகுதி காலித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்து அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. 

அதேபோல், போட்டியாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். 

இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டு,  அவை அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அனைத்து பெட்டிகளும் சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. 

அங்கு அனைத்தும் பாதுகாப்பாக வைப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து, அறைக்கு சீல் வைத்து பூட்டப்பட்டது. மேலும், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான ஒட்டு எண்ணிக்கை நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. அதனால், வாக்கு என்னும் மையத்தில் தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் ஈரோடு மாவட்ட போலீசார் என்று மொத்தம் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு அடுக்கு, துப்பாக்கி ஏந்தி ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்புப்படை போலீசார், மாவட்ட போலீசார் மூன்று அடுக்கு என்று மொத்தம் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five layer security in erode for vote counting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->