தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Fishermen not allowed in sea next 3 days in tamilnadu
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் "பிபோர்ஜோய்" புயலாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, வருகின்ற 10ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மன்னார் வளைகுடா, தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் இந்த குறிப்பிட்ட பகுதிகளில் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Fishermen not allowed in sea next 3 days in tamilnadu