எகிறி அடிக்கும் அலை - படகுகள் சேதத்தால் மீனவர்கள் கவலை.!
fishermans worry for boat damage
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் கடற்கரையோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகை கடலோர பகுதிகளில் சுமார் பன்னிரண்டு அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி வருவதால், கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில், நாகை மாவட்டம் கடுவையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக துறைமுகத்தில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்று கயிறு அறுந்து கடலில் விழுந்து கவிழ்ந்தது.
அதுமட்டுமல்லாமல், மீன்பிடி வலைகள், எஞ்சின் உட்பட சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விசைப்படகுடன் துறைமுக பாறையில் மோதி கடும் சேதமடைந்தது. இதனால் மீனவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
English Summary
fishermans worry for boat damage