தடையை மீறி கடலுக்குச் சென்று பிடித்த மீன்கள் பறிமுதல்; எச்சரிக்கை விடுத்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட மீனவர்களால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் தடை உத்தரவை மீறி பிடித்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதோடு, மீன் பிடித்த மீனவர்கள் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், 03 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீனவர்கள் சிலர் தடை உத்தரவை மீறி கடலுக்கு மீன்பிடிக்க செல்வதாகவும், பிடித்த மீன்களை சந்தையில் விற்பனை செய்வதாகவும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.

குறித்த புகாரை அடுத்து இன்று காலை தொண்டி மீன்மார்கெட்டில் மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர் மற்றும் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது, கடலில் தடையை மீறி பிடித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மீன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன், தடை உத்தரவை மீறி கடலுக்கு செல்லக்கூடாது எனவும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதன் போது மீனவர்கள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 

'வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மீன் பிடிக்க செல்வோருக்கு அபதாரம் விதிக்கப்படும். மேலும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அரசின் நிவாரண உதவிகளும் நிறுத்தப்படும்' என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fish caught in violation of the ban in the Tondi Sea have been confiscated and officials have issued a stern warning


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->