ரூ.1 கோடி அபராதம் வசூல் செய்த முதல் பெண் பயணசீட்டு பரிசோதகர்.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எழும்பூர், சென்டிரல், தாம்பரம் மற்றும் கிண்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் உரிய பயணசீட்டு இல்லாமல் ரெயிலில் பயணம் செல்பவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிப்பதற்காக திடீர் பயணசீட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ரெயில்களில் முறையற்ற பயணத்தை தடுக்கும் விதமாக, 2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 மார்ச் மாதம் வரை 'ஒரு கோடி கிளப்' என்ற புதிய நடைமுறையை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தியது. 

இந்த நடைமுறையில், 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கும் பயணசீட்டு பரிசோதகர்கள் இந்த கிளப்பில் இணைக்கப்படுவார்கள். அதன் படி, ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கும் மைல் கல்லை சென்னை கோட்டத்தை சேர்ந்த மூன்று பயண சீட்டு  பரிசோதகர்கள் எட்டியுள்ளனர். 

சென்னை கோட்டத்தின் தலைமை பயணசீட்டு பரிசோதகர் எஸ்.நந்தகுமார் 27 ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து ரூ.1 கோடியே 55 லட்சம் அபராதம் வசூலித்துள்ளார். இதேபோன்று, பரிசோதகர் ரோசலின் ஆரோக்கிய மேரி ரூ.1 கோடியே 3 லட்சம் அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளார். 

இந்திய ரெயில்வே துறையில் முதல் முறையாக அதிக அபராதம் வசூலித்த பெண் பயணசீட்டு பரிசோதகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து, பரிசோதகர் சக்திவேல் ரூ.1 கோடியே 10 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first woman Ticket Examiner collect to fine of one crore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->