விருதுநகர் || பட்டாசு ஆலை வெடி விபத்து - மேலாளர் கைது.!!
firecrackers factory manager arrest for fire accident near sathur
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே கங்கர் செவல்பட்டி என்ற கிராமத்தில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் ஊழியர்கள் நேற்று காலை பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி தீயணைப்புத்துறையினருடன் வந்த போலீசார் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இந்த வெடி விபத்து சம்பவத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் உள்பட மூன்று பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பட்டாசு ஆலையின் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, ஆலை உரிமையாளர் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
firecrackers factory manager arrest for fire accident near sathur