நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த பள்ளிக்கூடம் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு.!
fire accident in kanchipuram private school
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ஆயுத பூஜை என்பதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நேற்று இரவு பள்ளிக்கூடத்தில் இருந்து புகை வந்துள்ளது.
இதை பார்த்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை பலமணி நேரம் போராடி அணைத்தனர்.
இந்தத் தீவிபத்து நள்ளிரவில் நடந்ததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், பள்ளியின் அறையில் இருந்த ஷுக்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் தீயில் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கூடத்தில் நடந்த இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
fire accident in kanchipuram private school