பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..பெங்களூருவில் 4 பேர் கைது!
Female gang sexual assault 4 arrested in Bangalore
பெங்களூருவில் பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பருக்கு நன்கு அறிமுகமானவர்கள் எனவும், இந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த 35 வயது பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமான வாலிபர், தனது தங்கும் இடத்திற்கு வர அழைத்தார். பின்னர், பெண் தனது தோழியின் வீட்டில் வாலிபரை சந்தித்தபோது, இருவர் வீட்டிற்குள் புகுந்து மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
வன்கொடுமையின் பிறகு, ரூ.20,000 மதிப்பிலான பணமும், செல்போன்கள், வாஷிங் மெஷின், டிவி, ஏ.சி. உள்ளிட்ட பொருட்களும் பறிக்கப்பட்டன. பரப்பன அக்ரஹாரா போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரகு (24), கெஞ்சே கவுடா (26), மாதேஷ் (27), சஷிகுமார் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பருக்கு நன்கு அறிமுகமானவர்கள் எனவும், இந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
English Summary
Female gang sexual assault 4 arrested in Bangalore