மது அருந்தியதை கண்டித்த மகன்.. தந்தை செய்த விபரீத செயல்.. ! - Seithipunal
Seithipunal


மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கீழ் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.  இவருக்கு திருமணமாகி மகன் இருக்கிறார். கூலி தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், தினம் மது அருந்தி விட்டு வந்து தகராற்றில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று மது அருந்தி வந்ததை அவரது மகன் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த     ராஜேந்திரன் அந்தபகுதியில் கடற்கரையோரம் உள்ள மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father Committed Suicide Near Vizhuppuram


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->