#திண்டுக்கல் || தூங்கி கொண்டிருந்த விவசாயி வெட்டி கொலை.. மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!
Farmer Murder In Dindigul
விவசாயியை கொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், போல்நாயக்கன்வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு துரைக்கன்னு என்ற மனைவியும், முத்துலட்சுமி, விஜயலட்சுமி, தமிழ்ச்செல்வி என்ற மூன்று மகள்களும் உள்ளனர். அவரது மனைவி இறந்துவிட்டதாலும் மகள்களுக்கு திருமணமானதாலும் அவர் மட்டும் தனியே வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் மேற்கூரையைப் பிரித்து வீட்டின் உள்ளே வந்த மர்ம நபர்கள் உறங்கிக் கொண்டிருந்த அவரை வெட்டிபடுகொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார். காலையில் வேலைக்கு வந்த பெண் வந்த பெண் முத்துசாமி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Farmer Murder In Dindigul