மாணவிகளை குறிவைத்த போலி காதல் வலை...! போக்சோ சட்டத்தில் கம்பி எண்ணும் இளைஞன்...! நடந்தது என்ன...?
Fake love network targeting female students young man who counting wires under POCSO Act What happened
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மணிகண்டன், சிவகங்கையில் உள்ள கல்லூரியில் வணிக மேலாண்மை படிப்பை முடித்தவர் ஆவார்.
சமூக வலைதளத்தின் வாயிலாக இவருக்கு சிவகங்கையில் உள்ள கல்லூரியில் பயிலும் 19 வயது மாணவியும், திருச்சியில் உள்ள கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது மாணவியும் அறிமுகமானதாக தெரிவிக்கப்படுகிறது.

காலப்போக்கில் இருவரிடமும் நெருக்கமாக பழகிய அவர், இனிமையான வார்த்தைகளால் நம்பிக்கை ஏற்படுத்தி, திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து இருவரிடமும் காதல் நாடகம் அரங்கேற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, மானாமதுரை அனைத்து மகளிர் காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில், 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Fake love network targeting female students young man who counting wires under POCSO Act What happened