பரபரப்பான திருச்செந்தூர் முருகன் கோவில்! திடீரென சடலமாகத் தொங்கிய மர்ம நபர்...! - யார் அவர்? பின்னணி என்ன?
exciting Thiruchendur Murugan Temple mysterious person suddenly hanged corpse Who he What background
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு நிகழ்ந்த மர்ம மரணம் பக்தர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று முன்தினம் மதிய வேளையில், கட்டுமானப் பகுதியின் ஜன்னல் கம்பியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தனது வேஷ்டியால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திடுக்கிடும் காட்சியை கண்ட தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி உடனடியாக காாவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருச்செந்தூர் கோவில் காாவலர்கள், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார்? என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்த மர்ம மரணம் தொடர்பாக திருச்செந்தூர் கோவில் காாவலர்கள் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபரின் அடையாளத்தை கண்டறியும் பணியிலும், சம்பவத்தின் பின்னணியை வெளிக்கொணரும் விசாரணையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
exciting Thiruchendur Murugan Temple mysterious person suddenly hanged corpse Who he What background