முதலில் வீடியோ.. இப்ப ஆடியோ.. வைரலாகும் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்ட தெற்கு திமுக மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் (வயது 70). இவர் இயல்பாகவே திறம்பட பேசும் திறமையை கொண்டுள்ள நிலையில், தன்னுடன் இருக்கும் நபர்களுடன் எந்த நேரமும் கலகப்பாக பேசிக்கொண்டு இருப்பார். இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ காட்சியில் தன்னருகே நின்று கொண்டு இருந்த முஸ்லீம் சமூக நபரை பார்த்து, தள்ளி நில்... உங்களால்தான் கரோனா பரவுகிறது என்று கூறியிருந்தார். 

இந்த விஷயம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகவே, இந்த விஷயம் தொடர்பாக சிறுபான்மை அமைப்பை சார்ந்த நபர் அமைச்சருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த உரையாடலில், ஏற்கனவே ஒருதரப்பில் இருந்து கரோனாவை நாங்களே பரப்பி வருகிறோம் என்று கூறுகிறார்கள்.. நீங்களும் இப்படி கூறுவது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார். 

இதற்கு பதிலளித்த சாத்தூர் ராமச்சந்திரன், மாமா.. நான் திட்டியது சரியானதல்லதான். அவர் முகக்கவசம் அணியாமல் வருகை தந்திருந்தார். அதனால் தான் திட்டினேன். நீங்களும் எச்சரிக்கையுடன் இருக்கவில்லை என்றால், உங்களின் குடும்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் கூறினேன். நமது அருப்புக்கோட்டையில் எந்த பிரச்சனையும் இல்லை. பிற சுப நிகழ்ச்சிக்கும் செல்லவில்லை. பொதுவாக நல்லது வெளியில் வராது. கேட்டது என்பது வேகமாக வெளியே வருகிறது. தவறாக நினைக்க வேண்டாம். அவரிடமும் கூறிவிடுங்கள் என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex Minister Sathur Ramachandran audio trending in social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->