#BREAKING | ஈவிகேஎஸ் இளங்கோவன் நிலை என்ன? சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
EVKSElangovan medical report 22032023
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனை அறிக்கைபடி, ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை (ஐசியூவில்) பிரிவில் மருத்துவர்களின் thodar கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு தினங்களுக்கு முன் XBB வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், இன்று கொரோனாவில் இருந்து அவர் குணமடைந்துள்ளார்.

இதற்கிடையே சிலர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கவலைக்கிமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பிவந்துள்ளனர்.
இதனை பார்த்த அவரின் ஆதரவாளர்கள், ஈவிகேஎஸ் இளங்கோவனின் தற்போதைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அவர் நலமுடன் உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
EVKSElangovan medical report 22032023