ஈவிகேஎஸ் இளங்கோவன் கவலைக்கிடமா?! பரவிய வதந்தி! வெளியான புகைப்படம்!  - Seithipunal
Seithipunal


ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளதாக, அவரின் தற்போதைய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அவரின் ஆதரவாளர்கள், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இரு தினங்களுக்கு முன்  XBB வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

நேற்று பிற்பகலில் திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டவே, எக்கோ பரிசோதனை செய்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள். 

தொடர்ந்து நேற்று இரவில் அவருக்கு உடல் நிலை சீரான நிலையில், சுவாச பிரச்சினை இருப்பதால் சில நேரங்களில் செயற்கை சுவாசம் தேவைப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சிலர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கவலைக்கிமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பிவந்துள்ளனர்.

இதனை பார்த்த அவரின் ஆதரவாளர்கள், ஈவிகேஎஸ் இளங்கோவனின் தற்போதைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அவர் நலமுடன் உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EVKS Elangovan health rumor


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->