தூத்துக்குடி: லாரியில் மோதிய நீதிபதி கார்! 4 பேர் பலி! படுகாயத்துடன் நீதிபதிக்கு சிகிச்சை!
ettayapuram car lorry Accident
தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி பூரணஜெய ஆனந்த் உள்ளிட்ட ஆறு பேர், திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை தஞ்சாவூருக்கு தூத்துக்குடி-மதுரை சாலையில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில், தூத்துக்குடியில் இருந்து ஜிப்சம் ஏற்றிச் சென்ற லாரியுடன் அவர்கள் பயணம் செய்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், வழக்கறிஞர் தனஞ்செயன் ராமமூர்த்தி, ஓட்டுநர் வாசுராமநாதன் மற்றும் நீதிபதியின் பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்தனர்.
நீதிபதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், காயமடைந்தவர்களில் ஒருவரும் வழியிலேயே உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்தது.
நீதிபதி பூரணஜெய ஆனந்த் உட்பட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், டி.எஸ்.பி. அசோகன் தலைமையிலான மாசார்பட்டி போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
ettayapuram car lorry Accident