#ஈரோடு: நீதிமன்றத்தில் ஆஜராகி வந்ததும் சம்பவம்... ஓடஓட இருவர் வெட்டி படுகொலை.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் பகுதியை சார்ந்தவர் குணசேகரன் (வயது 29). கிருஷ்ணாம்பாளையம் பகுதியை சார்ந்தவர் கலைச்செல்வன் (வயது 31). இவர்கள் இருவரும் கடந்த 2019 ஆம் வருடத்தில் ரமேஷ் என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். 

பின்னர் ஜாமினில் வெளியான நிலையில், நேற்று விசாரணைக்காக இருவரும் ஈரோடு நீதிமன்றத்திற்கு நேரில் வந்து ஆஜராகினர். இவர்களுடன், ரமேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

இந்நிலையில், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த இருவரையும், வீரப்பன்சத்திரம் பெரியகுட்டை பகுதிக்கு வரவழைத்த மர்ம கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்தது. ஈரோட்டில் நடைபெற்ற பரபரப்பு சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். 

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode twice Murder Police Investigation 11 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal